ஓரினச்சேர்க்கை திருமண சட்டமூலத்திற்கு வாக்களிக்கும் எம்.பிக்களுக்கு, பெங்கமுவே நாலக தேரர் விடுக்கும் எச்சரிக்கை

Date:

ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்தை ஆதரிக்கும் சட்டமூலத்திற்கு வாக்களித்தால் தங்கள் ஊர்களுக்கு திரும்பும் போது கவனமாக இருக்குமாறு வணக்கத்திற்குரிய பெங்கமுவே நாலக தேரர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் உட்பட பல சிங்கள பௌத்த அமைப்புகள் இந்த சட்டமூலத்தை எதிர்க்கும் எனவும் ஓரினச்சேர்க்கை என்பது நமது கலாச்சாரம் மற்றும் நமது சமூகத்தை கடுமையாக பாதிக்கும் ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எந்த மதமும் ஓரினச்சேர்க்கையை நல்லதாக அங்கீகரிக்கவில்லை. கலப்பு கலாச்சாரம் கொண்ட மேற்கத்தைய நாடுகளில் இது அங்கீகரிக்கப்பட்டிருக்கலாம். அது எங்களுக்கு கவலை இல்லை.

ஆனால், நமது கலாச்சாரம் அப்படியல்ல.பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட எமது கலாச்சாரம் சமூகத்திற்கும் எதிர்காலத்திற்கும் நன்மை பயக்கும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது.

இது அரசாங்கத்தில் அதிகாரம் படைத்தவர்களின் தேவைக்காக செய்யப்படுகிறதா அல்லது மேற்கத்திய நாடுகளின் செல்வாக்கினால் செய்யப்படுகிறதா என்று கற்பனை செய்வது கடினம்.

மேலும் யாராக இருந்தாலும் அது அவர்களின் செல்வாக்கின் அடிப்படையிலோ அல்லது அவர்களின் சொந்த தேவைகளின் அடிப்படையிலோ இருந்தாலும்  இது நமது கலாச்சாரத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இந்த சட்டமூலம் அமுல்படுத்தப்பட்டால் குடும்பக் கட்டமைப்பு உடைந்து விடும் எனவும் பெங்கமுவே நாலக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...