கற்பிட்டி நரக்களி பாடசாலையின் ஆரம்ப பிரிவில் இடம்பெற்ற புத்தாண்டு நிகழ்வு

Date:

கற்பிட்டி நரக்களி றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலயத்தின் தரம் 01 தொடக்கம் 05 வரையான ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வு  (02) பாடசாலையின் அதிபர் அமல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

பால் பொங்கும் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்ட புத்தாண்டு நிகழ்வு முட்டி உடைத்தல், கயிறு இழுத்தல் அவுருது குமரயா, அவுருது குமாரி , யானைக்கு கண் வைத்தல் பேன்ற பாரம்பரிய போட்டிகள் இடம்பெற்றது.

மேலும் இன்றைய நிகழ்வுகளுக்கு மாணவ மாணவிகள் தங்கள் விரும்பிய தமிழ், சிங்கள பாரம்பரிய உடைகளில் பாடசாலைக்கு சமூகமளிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

இப் புத்தாண்டு விளையாட்டு போட்டி நிகழ்வுகளை ஆரம்ப பிரிவு பகுதி தலைவர் திருமதி அஜந்தா வகுப்பாசிரியர்களான பேகம், சகன்யா, பஸ்னா மற்றும் நயோமி ஆகிய வகுப்பாசிரியர்களின் வழிப்படுத்தலின் கீழ் சிறப்பாக இடம்பெற்றதாக பாடசாலையின் பிரதி அதிபர் மரிய லாவுஸ் மேர்சி தெரிவித்தார்.

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

Popular

More like this
Related

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...