கலா ஓயாவிலிருந்து நீரை சுத்திகரித்து கற்பிட்டிக்கு கொண்டு வர விசேட வேலைத்திட்டம்!

Date:

கலா ஓயாவின் நீரை சுத்திகரித்து நான்கு கிலோமீற்றர் தூரத்திற்கு கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள குழாய் மூலம் கற்பிட்டிக்கு நீரை கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கற்பிட்டி என்பது இலங்கையில் பல மரக்கறிகளை பயிரிடக்கூடிய ஒரு பிரதேசமாகும், அத்துடன் ஏற்கனவே நிலக்கரி, காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் நாட்டின் தேசிய மின்சார அமைப்பிற்கு 66 வீதமான மின்சாரத்தை வழங்கும் பிரதேசமாகும்.

மேலும், இலங்கையின் உப்பு உற்பத்தியில் 50 வீதத்துக்கும் அதிகமான உற்பத்தியானது புத்தளம் மாவட்டத்தின் பிரதான கற்பிட்டியில் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆனால் இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை சுத்தமான குடிநீரின்மையேயென நீர் வழங்கல் அமைச்சு கூறுகிறது.

இதன் விளைவாக, கற்பிட்டி மஜ்ஜித் குஃபா பள்ளிவாசல் தளத்தில் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான செலவில் நானோ தொழில்நுட்ப அடிப்படையிலான நீர் சுத்திகரிப்பு நிலையமும் நிறுவப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கலா ஓயாவிலிருந்து நீரை சுத்திகரித்து கல்பிட்டிக்கு கொண்டு வரும் வேலைத்திட்டத்தை உடனடியாக செய்யமுடியாதெனவும், அதற்கு அதிக முயற்சியும் செலவும் தேவைப்படுமெனவும் அமைச்சு கூறுகிறது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் இதை முழுமையாக முடிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...