அரச அங்கீகாரம் பெற்ற பஹன மீடியா (தனியார்) நிறுவனத்தின் பஹன அகடமி கஹட்டோவிட்ட உடுகொட மற்றும் திஹாரியப் பகுதிகளைச் சேர்ந்த மாணவிகளுக்காக நடத்தப்படும் கைப்பேசிநுட்பம் (MOJO) தொடர்பான கருத்தரங்கும் செயல்முறைப் பயிற்சியும் எதிர்வரும் 26,27 ஆம் திகதிகளில் கஹட்டோவிட்டவின் கல்விக்கும் அபிவிருத்திக்குமான இமாம் ஷாபிஈ நிலையத்தில் நடைபெறும்.
இம்முறை க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதி ஓய்வாக இருக்கும் மாணவிகள் இதற்காக விண்ணப்பிக்கலாம். இம்மாதம் 24 ஆம் திகதிக்கு முன்னர் 0770732306 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தம்மைப் பதிவு செய்துகொள்ளலாம்.
முற்றிலம் இலவசமாக நடைபெறும் இப்பயிற்சி நெறியின் வளவாளர்களாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத் தயாரிப்பாளர் இஸ்பஹான் சரீப்தீன் ‘நியூஸ்நவ்’ ஊடகத்தின் பிரதம ஆசிரியர் பியாஸ் முஹம்மத் ஆகியோரும் வருகைத் தரவுள்ளனர்.
சான்றிதழ் வழங்கும் இறுதி அமர்வில் பஹன மீடியா அகடமியின் முகாமைத்துவ பணிப்பாளர் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.