2023 அக்டோபர் 7ல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் மீது பலஸ்தீன சுதந்திர போராட்டக் குழுவான ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்து, பலஸ்தீனத்தின் காஸா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனஒழிப்பு மற்றும் பேரழிவுகள் பற்றி சரியான உண்மையான தகவல்களை வழங்க, பெரும்பாலான இலங்கையின் பிரதான ஊடகங்கள் தவறிவிட்டன.
பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் படுகொலைகள் பற்றியும் காஸாவில் குடியிருப்புக்கள், மதவழிபாட்டு இடங்கள, ஆஸ்பத்திரிகள், கல்விக் கூடங்கள், வாத்தக நிலையங்கள், வாழ்வாதார இடங்கள், குடிநீர் திட்டங்கள், மின்சார விநியோக நிலையங்கள் என்பனவற்றில் அது ஏற்படுத்தி வரும் கண்மூடித்தனமான அழிவுகள் பற்றியும் சில விரிவான கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
காஸா இந்தத் தாக்குதல்கள் மூலம் அடிப்படை வசதிகள் எதுவும் அற்ற ஒரு வாழும் நரகமாக மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் இங்கு கவலைக்குரிய விடயம் எதுவென்றால் வெளிநாட்டு செய்திகளையும் நாங்கள் தான் முண்டியடித்துக் கொண்டு வழங்குகின்றோம் என்று மார்தட்டும் சில தனியார் ஊடகங்கள் கூட, இரண்டாவது உலக மகா யுத்தத்தின் பின் இடம்பெற்று வருகின்ற மிக மோசமான இஸ்ரேலிய இனப்படுகொலைகள் பற்றி பெரும்பாலும் விரிவான தகவல்களை வழங்கத் தவறியுள்ளன.
காஸாவிலும் மேற்கு கரை பிரதேசத்திலும் இஸ்ரேல் புரிந்து வரும் இனப்படுகொலைகள் பற்றி விரிவான தகவல்களை நிறுத்துமாறு கொழும்பில் உள்ள இஸ்ரேல் மற்றும் மேலைத்தேச தூதரகங்கள், உள்ளுர் ஊடக நிலையங்களின் உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக நான் அறிந்து கொண்டேன்.
இதை உறுதி செய்து கொள்வதற்காக சுமார் 60 வருடங்களுக்கு மேல் என்னோடு நட்பு கொண்டுள்ள எனது அன்புக்குரிய நண்பர் ஒருவரை நான் தொடர்பு கொண்டேன்.
அவர் நியாயமான சிந்தனை கொண்ட கௌரவமான ஒரு பெரும்பான்மை இன ஊடகவியலாளர்.
அவர் எனக்கு நிலைமையை விளக்கியதோடு, இதை கண்டிப்பதில் இலங்கை முஸ்லிம் சமூகம் ஏன் பாரபட்சமாகவும் பொடுபோக்காவும் உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
“இது தொடர்பான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடயங்களை நாம் எமது பத்திரிகையில உரிய முக்கிய இடமளித்து போதுமான அளவுக்கு பிரசுரித்துள்ளோம். காஸா படுகொலைகள் பற்றி ஆசிரிய தலையங்கங்களையும் (கடந்த வாரம் கூட) எழுதி உள்ளோம்.
நடைபெற்று வரும் படுகொலைகள் பற்றிய அரபுலகின் முணுமுணுப்புக்கள் பற்றியும் எழுதி உள்ளோம், இலங்கை முஸ்லிம்களிடமிருந்து பொதுவான ஆர்ப்பாட்டங்கள் போதாது, குறிப்பாக அதன் முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம இருந்து போதிய எதீர்ப்புக்கள் வெளிக்காட்டப்படவில்லை என்பது பற்றியும் நாம் பிரஸ்தாபித்துள்ளோம்.
லண்டனிலோ அல்லது வாஷிங்டனிலோ இடம்பெற்றவை போல உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான பாரிய அளவிலான பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டங்கள் எதுவுமே கொழும்பிலோ, காத்தான்குடியிலோ அல்லது புத்தளத்திலோ இடம்பெறவில்லையே.
ஒருவேளை அமெரிக்க, இஸ்ரேல் தூதரகங்கள் இவர்களை அழைத்து பேசி உள்ளனவா என்றும் அல்லது ஈரானுக்கு ஆதரவான ஹமாஸ் இஸ்ரேலிடம் வாங்கிக் கட்டி மட்டுப்படட்டும் என்று மகிழ்ச்சியில் உள்ளார்களா? ஏன்றும் கூட எனக்கு ஆச்சரியமாக உள்ளது” என்று அந்த பத்திரிகை ஆசிரியர் கூறினார்.
‘இவ்வளவு இக்கட்டான காலகட்டத்திலும் முஸ்லிம் உலகம் கருத்தியல் அடிப்படையில் பிளவுபட்டுள்ளமை வெட்கக் கேடானதாகும்.
இந்தப் பிளவு மேற்குலகால் நன்கு பயன்படுததப்பட்டு வருகின்றது. அதனால் பலஸ்தீன மக்கள் தங்களுக்காக குரல் கொடுக்க எந்தவொரு திடகாத்திரமான ஆதரவும் இன்றி உலகில் தனிமையில் விடப்பட்டுள்ளனர்’ என்று அவர் மேலும் கூறினார்.
அவரது கருத்துக்களை ஏற்றுக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழயில்லை. அதனால் தான் முஸ்லிம் சமூகம் தனது கண்களைத் திறக்க வேண்டும் என்பதற்காக நான் இதனை எழுதுகின்றேன்.
இந்தப் பிரச்சினையின் ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் இது பற்றி பேசினர். ஆனால் காலப் போக்கில் அவர்கள் காணாமல் போய்விட்டனர்.
கொழும்பில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஒரு போதகர் ஹமாஸின் தாக்குதல் நடந்த முதலாவது வாரத்தில் இதுபற்றி பேசினார். அதிலும் கூட அவர் இஸ்ரேலின் யுத்தக் குற்றங்கள் பற்றி வாய் திறக்கவில்லை.
போராட்டத்தின் இரண்டாவது வாரத்தில் அக்டோபர் 2023ல் இன்னுமொரு போதகரும் பேசினார். அவரும் இஸ்ரேல் இனப்படுபொலைகளை புரிந்து வருகின்றது என்று குறிப்பிடவே இல்லை.
நான் அதுபற்றி அவரிடம் கேட்டேன். ‘சில பிரசசினைகள் இருக்கலாம்’ என்றார். அது என்ன பிரசசினை என்று மீண்டும் கேட்ட போது அதற்கு அவரிடம் பதில் இருக்கவில்லை.
முஸ்லிம்கள் உள்நாட்டிலும்; வெளிநாடுகளிலும் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் இருந்தும் அழிவுகளை ஏற்படுத்தும் சக்திகளிடம் இருந்தும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் ஆபத்துக்கள் பற்றி அவர்களுக்கு விழிப்பூட்ட வெள்ளிக்கிழமை ஜும்ஆ பிரசங்க மேடைகளை இனிமேலும் ஏன் நாம் பயன்படுத்த கூடாது? இதுகால வரை இஸ்ரேலின் குற்றங்கள் பற்றி முஸ்லிம்கள் சிலர் தீவிரமாக ஆராய்ந்த போதிலும் அநேகமானவர்கள் அலட்சியமாகவே இருந்துள்ளனர்.
ளுர்ழுசுவுNநுறுளு.டுமு என்ற யுடியூப் இணைய ஊடகம் மட்டுமே ஆரம்பம் முதல் இந்த விடயத்தை முழுமையாக தந்த வண்ணம் உள்ளது.
ஆனால் அமைதியான ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், திறந்த கலந்துரையாடல்கள் என பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்யாமல் அவர்களை தடுத்த காரணிகள் என்ன? என்ற கேள்வியும் உள்ளது.
முன்னாள் பிரதம மந்திரி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாஸ ஆகியோர் செய்தது போல் இஸ்ரேலை இலங்கையில் இருந்து வெளியேற்றுங்கள் என்று கோரிக்கைகள் இதுவரை முன் வகைப்படாமல் இருப்பது என்?
ஒரு முன்னணி சமூக சேவை நிறுவனத்திடம் இஸ்ரேலின் யுத்தக் குற்றங்களைக் கண்டித்து பொதுக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளும் இது வரை செவிடன் காதில் ஊதிய சங்காக அமைந்துள்ளமை வெட்கக் கேடானதாகும்.
இது முற்றிலும் பாரதூரமான அலட்சியமாகும். பலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் இனப் படுகொலைகளில் சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு இராச்சியமும் பங்காளிகளாக இருக்கின்றன என்ற சந்தேகம் பரவலாக உள்ளது.
ஒருவேளை இவர்கள் உள்நாட்டில் கொண்டுள்ள செல்வாக்கு தான், இவர்களோடு சேர்த்து ஜோர்தான் எகிப்து என்பனவும் இணைந்து புரிகின்ற குற்றங்களை உள்நாட்டு சமூக அமைப்புக்கள் கண்டும் காணாமல் இருக்க காரணமாக அமைந்துள்ளனவா? என்பதும் ஆராயப்பட வேண்டியதாகும்.
இந்த ஈவு இரக்கமற்ற குற்றங்களுக்கு எதிராக முஸ்லிம்களை ஓரணியில் ஒன்றுதிரட்ட எல்லா தேசிய தலைமைகளும் தவறியுள்ளன.
எனவே அடிமட்ட தலைமைத்துவங்கள் தமது சொந்த முயற்சிகளை மேற்கொண்டு சமூகத்தை வழிநடத்தி இத்தகைய குற்றங்களை கோடிட்டுக் காட்டி மக்களுக்கு வழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய தருணம் இதுவாக உள்ளது