காசா இனப்படுகொலையை உடனடியாக நிறுத்துமாறும், நிரந்தர போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் கொழும்பு-7 தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன் இன்று (31) ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
இந்த போராட்டத்தை பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கை சங்கம், சிவில் அமைப்பு மற்றும் சோசலிச மற்றும் இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள பலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது.
இதில் 36 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள். 75% பேர் குழந்தைகள் என பலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கியுள்ளன.