பலஸ்தீனிய பத்திரிகையாளரும், காசாவில் உள்ள அல்ஜசீரா ஊடக பொறுப்பாளருமான பிரபல Wael Dahdouh, அவர்கள் இஸ்ரேலின் விமானதாக்குதலில் தன்னுடைய குடும்பத்தை முற்றாக இழந்து காயமடைந்த நிலையில் கத்தார் அரசுடைய முழுமையான ஆதரவில் அவருக்கான சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு கத்தார் சென்றிருந்தார்.
தனது ஊடகப்பணிக்காக சர்வதேச ஊடக விருதுகளை வென்ற அவர் கத்தாரிலிருந்து “அல் ஜசீரா தூதர்கள் திட்டத்தின்” ஒரு பகுதியாக, பிரஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் தகவல் அறிவியல் மற்றும் தேசிய ஒன்றியத்துடன் இணைந்து துனிசியா நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
துனிசியாவில் உள்ள கார்தேஜ் விமான நிலையத்தில் அவருக்கு அங்குள்ள மக்கள் கொடுத்த உணர்வுபூர்வமான வரவேற்பை இந்த காணொளி காட்டுகின்றது.