கொழும்பு விமான கண்காட்சி மற்றும் பாதுகாப்பு கண்காட்சி (CADE 2024) மே 29 முதல் ஜூன் 2 வரை காலி முகத்திடல் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தில் நடைபெறவிருந்த நிலையில், அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை (SLAF) தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட CADE, சர்வதேச பங்காளிகள் மற்றும் பாதுகாப்பு துறை பங்குதாரர்கள் மற்றும் வெளிநாட்டு விமானப்படைகளின் பல கோரிக்கைகளின் காரணமாக, அவர்களின் பங்கேற்பிற்கான அதிக வாய்ப்புகளுக்கு இடமளிப்பதற்கும் பார்வையாளர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை வழங்குவதற்கும் மீண்டும் திட்டமிடப்பட்டது.
இலங்கை விமானப்படையின் 74வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த நிகழ்வு 2025 பெப்ரவரி 26 முதல் மார்ச் 02 வரை நடைபெறும் என விமானப்படை தெரிவித்துள்ளது.