கோலாலம்பூரில் நடைபெறும் சர்வதேச மாநாட்டில் 63 நாடுகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள் பங்கேற்பு

Date:

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறும் சர்வதேச மதத் தலைவர்களின் மாநாட்டில் 63 நாடுகளைச் சேர்ந்த மதத் தலைவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை பங்கேற்கவுள்ளனர்.

இலங்கையிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் மர்ஜான் ஃபலீல் தலைமையிலான சர்வமதக் குழு தலைமை பங்கேற்கிறது.

உலகெங்கிலும் உள்ள மதத் தலைவர்களிடையே அமைதி, நல்லிணக்கம் மற்றும் வேற்றுமைக்குள் ஒற்றுமை ஆகியவற்றை மேம்படுத்துவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் பின் இப்ராஹிம், முஸ்லிம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் டாக்டர் முகமது அப்துல் கரீம் அல்-இசா மற்றும் முஸ்லிம் அறிஞர்கள் அமைப்பின் தலைவரும், செனட்டருமான டத்தோ அவர்களின் ஆதரவில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இலங்கைக் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கை மகாபோதி சங்கத்தின் தலைவர் பனகல உபதிஸ்ஸ தேரர்,  தர்ஷக சர்மா குருக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் ஷேக் ரிஸ்வி முப்தி, முஸ்லிம் இளைஞர் சங்கத்தின் தலைவர் ஷேக் எம்.எஸ்.எம்.தாசிம், முன்னாள் ஹஜ் சபை தலைவர் அஹ்கம் உவைஸ் முகமது மற்றும் கொழும்பு டைம்ஸ் பிரதம ஆசிரியர் மொஹமட் ரசூல்தீன், அகில இலங்கை YMMA மாநாட்டின் முன்னாள் தலைவர்களான காலிட் பாரூக் மற்றும் ஹலீம் ஏ. அஸீஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டுள்ளனர்.

உலமா தலைவர் ஷேக் ரிஸ்வி முஃப்தி ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தவுள்ளதுடன், ஸம் ஸம் அறக்கட்டளையின் தலைவர் ஷேக் யூசுப் முப்தியும் மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...