சஜித்தின் மே தின மேடையை புறக்கணித்த ராஜித, தலதா

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களாக கருதப்படும் ராஜித சேனாரட்ன, தலதா அத்துகோரள ஆகியோர் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

ஐக்கள் மக்கள் சக்தி பிரதான பங்காளிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் கலந்துகொள்ளவில்லை.

கட்சிக்குள் உள்ள ஏற்பட்டுள்ள சில கருத்து முரண்பாடுகள் காரணமாகவே ராஜித சேனாரட்ன, தலதா அத்துகோரள ஆகியோர் மே தின நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை எனத் தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்துக்கொள்வதற்கு எதிராக தலதா அத்துகோரள அண்மையில் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் இணைய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த பின்புலத்திலேயே இன்றைய கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்காக ரஷ்யாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச்...

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் பிட்டபெத்தரவில் கண்டுபிடிப்பு!

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம், காலி – தெனியாய பிரதான...

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான இப்தார் நிகழ்வு

ஊடகவியலாளர்களின் பங்கேற்புடன் கூடிய விசேட இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு நேற்று...

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...