இலங்கை பொலிஸார் அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
ராஜகிரிய பகுதியில் 2016ம் ஆண்டு இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியை கண்டுபிடிக்கும் நோக்கில், அவரது மனைவி, குழந்தை மற்றும் அவரது தாய் ஆகியோரை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவில் முறையற்ற விதத்தில் பல மணிநேரம் தடுத்து வைத்துள்ளதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
அதன்படி, அடிப்படை உரிமையை மீறியதற்காக பொறுப்பை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அப்போதைய பதில் பணிப்பாளர் நெவில் சில்வா மற்றும் பிரதம பொலிஸ் பரிசோதகர் மெத்தானந்த ஆகியோர் தமது சொந்த நிதியிலிருந்து 2,50,000 ரூபாவை பாதிக்கப்பட்ட தரப்பிற்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பிற்கு 10,000 ரூபாவை வழங்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.