சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஓ.எல்.அமீர் அஜ்வத் இன்று இலங்கையிலிருந்து சவூதி நோக்கி பயணமானார்.
இது தொடர்பாக தனது முகநூலில் பதிவிட்டுள்ள அவர்,
நான் சவூதி அரேபியாவில் கடமைகளை பெறுப்பேற்றுக்கொள்ள ரியாத் செல்லவுள்ளேன்.
சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராக என்னை நியமிப்பதற்கான தொடர் நிகழ்வுகளை ஏற்பாடு செய்த கொழும்பில் உள்ள அனைத்து சமூக சேவை நிறுவனங்கள், நலன்புரி சங்கங்கள், ஊடக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், இராஜதந்திர சமூகம் மற்றும் தனிநபர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும் உங்கள் கருணை, நல்லெண்ணம் மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றால் நான் ஆழ்ந்த மரியாதையும் பணிவும் அடைகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.