அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள்/ நம்பிக்கை பொறுப்பாளர்கள்
ஜும்மாவுடைய நேரத்தை சுருக்கிக் கொள்ளல் சம்பந்தமாக முஸ்லிம் சமய அலுவல்கள் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான கா.பொ.த.சாதாரண தர பரீட்சை 06.05.2024 – 15.05.2024 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தினங்களிலும் ஜும்மா தொழுகைக்கு பின்னரும் பரீட்சைகள் நடைபெற உள்ளதால் ஜும்மா பிரசங்க நேரத்தை கட்டாயமாக சுருக்கி பிற்பகல் 1:00 மணிக்கு முன்னர் முடித்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் Z.A.M பைசல் கேட்டுக்கொண்டுள்ளார்.