இலங்கையில் சிகிபில்லா விலங்கு?: AFP வெளியிட்ட தகவல்

Date:

அழிந்துப் போனதாக கூறப்படும் “சிகிபில்லா” (Chikibilla) எனப்படும் விலங்கு இலங்கையில் மீளவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறி சமூக ஊடகங்களில் வெளியான படங்கள் முற்றிலும் போலியானவை என AFP செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் யால சரணாலயத்தில் 103 ஆண்டுகளுக்கு பின் சிகிபில்லா கண்டுப்பிடிக்கப்பட்டதாக அண்மையில் சமூக ஊடங்களில் படங்கள் பகிரப்பட்டன.

எவ்வாறாயினும், அவ்வாறான எந்தப் புகைப்படங்களும் பதிவுசெய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.

வனவிலங்கு நிபுணர்களும் அப்படி ஒரு உயிரினம் இலங்கையில் இல்லை என்று AFPயிடம் கூறியுள்ளனர்.

குறித்தப் படங்கள் டிஜிட்டல் முறையில் கையாளப்பட்டதாதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யலா தேசிய பூங்கா, இலங்கையின் தென்கிழக்கில் அமைந்துள்ள இயற்கையான பரந்த தேசிய பூங்காவாகும். இது பல்வேறு வகையான பாலூட்டிகள் மற்றும் பறவை இனங்களுக்கு தாயகமாக இருந்து வருகின்றது.

இந்நிலையில், மரங்கள் நிறைந்த இருண்டப் பகுதியில் நான்கு கால்களுடன் சிகிபில்லா இருப்பது போல படங்களில் காட்டப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், “யால தேசிய பூங்காவில் இருந்து அப்படி எதுவும் பதிவாகவில்லை” என்று பூங்காவின் செய்தித் தொடர்பாளர் AFPயிடம் தெரிவித்துள்ளார்.

“சிகிபில்லா என்ற விலங்கு இலங்கையில் இல்லை. உலகில் இப்படியொரு விலங்கு இருக்கிறதா என்பது தனக்கு சந்தேகம்” உள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விலங்கியல் சிரேஷ்ட விரிவுரையாளர் கனிஷ்க உகுவெல தெரிவித்துள்ளார்.

மூலம்: இணையம்

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...