அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் (Donald Trump) வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைப்பதற்கு நடிகை ஒருவருக்கு 1.3 இலட்சம் டொலா் (சுமாா் ரூ.109 கோடி) வழங்கியதாக டிரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நீதிபதி அறிவித்த நிலையில் ஜூலை 11ஆம் திகதி டிரம்ப்பிற்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இது முதல் முறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.