தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள 06 மாதங்கள் முதல் 3 வயது வரையிலான சிறுவர்களுக்கு வழங்கப்படும் திரிபோஷா உற்பத்தியை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி, நாட்டில் அடையாளம் காணப்பட்ட ஊட்டச்சத்து தேவைகளை குழந்தைகளுக்கு வழங்குவதற்காக, குறிப்பிட்ட காலத்திற்கு நிபந்தனைகளுடன் திரிபோஷா உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.