நான்கு இலங்கையர்களுக்கும் ISISஉடன் தொடர்பு இருப்பதாக ஆதாரங்கள் இல்லை: பொலிஸார் கைவிரிப்பு

Date:

பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்களுக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கும் இடையே எந்தத் தொடர்பையும் புலனாய்வாளர்கள் கண்டறியவில்லையென பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இந்தியாவின் அகமதாபாத்தில் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையால் (ATS) மே 20 ஆம் திகதி இலங்கையைச் சேர்ந்த மொஹமட் நுஷ்ரான், மொஹமட் நஃப்ரான் நவ்ஃபர், மொஹமட் ரஸ்டீன் அப்துல் ரசீம் மற்றும் மொஹமட் பாரிஸ் மொஹமட் ஃபாரூக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நால்வரும் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாகவும் இந்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே ரஸ்தீன் மற்றும் பாரிஸ் ஆகியோரின் நெருங்கிய கூட்டாளியான அப்துல் ஹமீட் அமீர் என்பவரும் விசாரணைக்காக  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மே 21 அன்று ஃபாரிஸ் மற்றும் அமீரின் வீடுகளில்  சோதனைகளை நடத்திய போதிலும், குறிப்பிடத்தக்க அல்லது சந்தேகத்திற்குரிய கண்டுபிடிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இதேபோல், மற்ற சந்தேக நபர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளும் இதுவரை ஐ.எஸ்.ஐ.எஸ் உடனான தொடர்புகளின் எந்த முடிவையும் தரவில்லை.

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனால் நியமிக்கப்பட்ட பயங்கரவாத விசாரணைப் பிரிவின் விசேட குழுவொன்று உள்ளூர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...