நீதிமன்றத்தை அவமதித்தாரா மைத்திரி?: மீண்டும் ஒரு மனுத் தாக்கல்

Date:

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு உறுப்பினர் மான்டேக் சரத்சந்திரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சஷி மகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் இன்று வியாழக்கிழமை (30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த மனு தொடர்பான உண்மைகளை உறுதிப்படுத்தும் வகையில் பிரதிவாதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் மனுதாரரின் சட்டத்தரணிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுத்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தை மீறும் வகையில் செயற்பட்டு நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றம் சுமத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...