ஏப்ரல் 30 ஆம் திகதி எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணத்தில் மாற்றம் செய்யப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என தனியார் பஸ் சங்கங்கள் நேற்று தெரிவித்துள்ளன. டீசல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பஸ் கட்டணத்தை குறைக்கும் அளவுக்கு செலவுகள் மட்டுப்படுத்தப்படவில்லை என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பொது செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.