கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை முடித்த மாணவிகளுக்கான இலவச பயிற்சி நெறி 26,27ஆம் திகதிகளில் அல் இமாம் ஷாபி சென்டரில் நடைபெற்றது.
இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் தயாரிப்பாளர் இஸ்பஹான் சஹாப்தீன் வளவாளராக வருகைத்தந்ததுடன் சான்றிதழ் வழங்கும் வைபவத்துக்கு அதிதியாக அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் கலந்துகொண்டதுடன் முன்னாள் தகவல் திணைக்களப்பணிப்பாளர் ஹில்மி முஹம்மத், பிரபல வர்த்தகர் அல்ஹாஜ் மாலிக் மதனியும் கலந்துசிறப்பித்தனர்.
இந்த பயிற்சி நெறியை பஹன மீடியா தனியார் நிறுவனத்தின் பஹன அகடமி ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.