பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி: ஒட்டுமொத்த சனத்தொகையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்

Date:

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் உள்ள தம்பதியினர் குழந்தை பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை அளிப்பதில்லை என மகப்பேறு நிபுணத்துவ வைத்தியர் பேராசிரியர் அஜித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக இலங்கையில் பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதில் முன்னுரிமை அளிப்பதில்லை என்பதற்கு இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியே காரணம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“குழந்தை பெற்ற சில தம்பதிகள் இரண்டாவது குழந்தையைப் பற்றிக் கருத்தில் கொள்ளவில்லை, குழந்தை இல்லாதவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டனர் என்றும் அவர் கூறினார்.

இது இலங்கையின் ஒட்டுமொத்த சனத்தொகையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என பேராசிரியர் அஜித் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் கணிசமான வீழ்ச்சியைக் காட்டியுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் அண்மையில் தெரிவித்திருந்தது.

2020ஆம் ஆண்டுக்கு முன்னர் சுமார் 325,000 ஆக இருந்த வருடாந்த பிறப்புகளின் எண்ணிக்கை தற்போது 280,000 ஆக குறைந்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியிருந்தது.

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...