புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழைக் காரணமாக புத்தளத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் நேற்று (18) இரவு முதல் பெய்து வரும் கடும் மழையினால் புத்தளம் பிரதேசத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகளான கடையாக்குளம், தில்லையடி, ரத்மல்யாய, முள்ளிபுரம் பாலாவி உள்ளிட்ட பல பிரதேசஙகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.
அதேபோல புத்தளம் தள வைத்தியசாலை தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளமையினால் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகள் வழங்குவதில் புத்தளம் வாழ் சமூக நல பணியாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
புத்தளம் ஐ.பீ.எம்.மண்டபத்தில் புத்தளம் முன்னாள் நகர பிதா எம்.எஸ்.எம்.ரபீக் தலைமையில் தொண்டர் அமைப்பினர், இளைஞர் அமைப்பினர் ஒன்று கூடி உணவு சமைப்பதில் இறங்கினர்.