மகளிர் T20 கிண்ணம்: இலங்கை விளையாட தகுதி பெற்றது

Date:

மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

நேற்று (05) இடம்பெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியின் அரையிறுப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் மகளிர் அணியை 15 ஓட்டங்களால் இலங்கை மகளிர் அணி வெற்றிகொண்டிருந்தது.

இதன்படி, இறுதிப் போட்டியில், ஸ்காட்லாந்து மகளிர் அணியுடன் இலங்கை மகளிர் அணி பலப்பரீட்சை நடத்த உள்ளது.

இந்த ஆண்டு பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் T20 உலகக் கிண்ண தொடரில் விளையாட இலங்கை மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இரு அணிகளும் தகுதி பெற்றுள்ளன.

நேற்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணி சார்பாக விஷ்மி குணரத்னே 45 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...