மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும்: அவுஸ்திரேலியா

Date:

ரபா மீதான இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடரக்கூடாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தற்போது மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்தவேண்டும் அதன் மூலம் பொதுமக்களை பாதுகாக்க முடியும் என்பதை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதல்கள் பயங்கரமான ஏற்றுக்கொள்ள முடியாத விளைவுகளை  ஏற்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள பெனிவொங் காசாவின் சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் தஞ்சமடைந்துள்ள ரபாவின் மீது இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்க கூடாது என்பது குறித்து அவுஸ்திரேலியா தெளிவாக உள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் பொதுமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதை  நிறுத்தவேண்டும் தனது ஆயுதங்களை கைவிடவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

Popular

More like this
Related

கம்பஹா – கொழும்பு தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தம்

ஒரு சில தனியார் பஸ் சேவைகள் தமது சேவைகளிலிருந்து விலகியுள்ளன. கம்பஹா –...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை!

இன்றையதினம் (04) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...