மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி அவர்களுக்காக மறைவான ஜனாசா தொழுகை இன்று கொழும்பிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெறவில்லை.
அந்தவகையில் கொழும்பு 10 மாளிகாவத்தை மஸ்ஜிதுஸ் சலாம் ஜும்ஆ பள்ளிவாசலிலும், வேகந்தை ஜும்ஆ பள்ளிவாசலிலும் மறைவான ஜனாசா தொழுகை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு நடைபெறும்.
மாளிகாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் அவர்களும்,வேகந்தை பள்ளிவாசலுக்கு ஈரானிய கலாசார உத்தியோகத்தரும் கலந்துகொள்வர்.
இதேவேளை கொழும்பு 7, ஜாவத்தை ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் ஜனாசா தொழுகை நடைபெற ஏற்பாடாகியிருந்தபோதும் பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.