மறைந்த ஈரான் ஜனாதிபதிக்கு அனுதாப கையொப்பங்களை பெறும் செயல்திட்டம் புத்தளத்தில்

Date:

ஹெலிகாப்டர் விபத்தில் மரணமான ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்காக தமது ஆழ்ந்த அனுதாபங்களை புத்தளத்தில் வாழ்கின்ற மக்களும் தெரிவித்து வருகின்றனர்.

அதற்கமைய புத்தளம் கலாச்சார அமைப்பு ஏற்பாடு செய்திருக்கின்ற அனுதாப கையொப்பங்களை பெறுகின்ற செயல்திட்டம் தற்பொழுது புத்தளம் நுகுமான் மண்டபத்தில் இடம்பெறுகிறது.

இன்று காலை 8 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை பொதுமக்கள் இதில் கையொப்பங்களை இட முடியும்.

இன்று மாலை வரை பெறப்படுகின்ற இந்த கையொப்பங்களை இலங்கையில் உள்ள ஈரான் தூதுவராலயத்தின் ஊடாக ஈரான் நாட்டின் பதில் ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு பாரப்படுத்தப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

ஈரான் இஸ்லாமிய குடியரசு இலங்கையில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களுக்கும் அது போன்று நலிவுற்ற மக்களுக்கான நல நலன் திட்டங்களுக்கும் தொடர்ந்து உதவி வரும் ஒரு நாடு என்பதினால் இந்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக புத்தளம் கலாச்சார அமைப்பு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...