மறைந்த ஈரான் ஜனாதிபதிக்கு கொழும்பு பள்ளிவாசல்களில் ஜனாசா தொழுகை

Date:

மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி அவர்களுக்காக மறைவான ஜனாசா தொழுகை இன்று கொழும்பிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெறவில்லை.

அந்தவகையில் கொழும்பு 10 மாளிகாவத்தை மஸ்ஜிதுஸ் சலாம்  ஜும்ஆ பள்ளிவாசலிலும், வேகந்தை ஜும்ஆ பள்ளிவாசலிலும் மறைவான ஜனாசா தொழுகை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு நடைபெறும்.

மாளிகாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரேசா டெல்கோஷ் அவர்களும்,வேகந்தை பள்ளிவாசலுக்கு   ஈரானிய கலாசார உத்தியோகத்தரும் கலந்துகொள்வர்.

இதேவேளை கொழும்பு 7, ஜாவத்தை ஜும்ஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் ஜனாசா தொழுகை நடைபெற ஏற்பாடாகியிருந்தபோதும் பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அல்குர்ஆன் வசனங்களின் எழில்மிகு வடிவங்கள்:தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அல்-குர்ஆனிய அறிவியல் அரபு எழுத்தணி போட்டி மற்றும் கண்காட்சி!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடத்தின்...

காசாவில் இஸ்ரேலின் தீவிர வான் தாக்குதல்: ஹமாஸ் ஆயுதப்பிரிவு தளபதி இஸ் அல்-தின் அல்-ஹத்தாத் குறிவைப்பு!

மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித்...

78 ஆண்டுகால நக்பா பேரவலம்: பூர்வீக நிலத்திற்காக ஏங்கும் பாலஸ்தீனர்கள்!

மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு...

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்

இறக்குமதி வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி தீர்வை வரி...