முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றிய பைஸல் ஆப்தீன் உயர்பதவி பெற்றுச் சென்றதன் பி்ன்னரான வெற்றிடம் கிறிஸ்தவ மத விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் சத்துரி பின்டோ அவர்களினால் நிரப்பப்பட்டுள்ளது.
இம்மாதம் 14 ஆம் திகதி முன்னாள் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் விலகிச் சென்றதிலிருந்து இவர் பணிப்பாளராக பதில் கடமையாற்றி வருகின்றார்.
தற்போது மும்முரமாகச் செயற்படும் ஹஜ் விவகாரங்கள், வக்பு சபை உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களத்தின் தற்காலிகப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ மத விவகாரப் பணிப்பாளரினாலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முஸ்லிம் சமய கலாச்சாரத் திணைக்களம் தனியாக இயங்கி வந்த ஒன்பது மாடிக் கட்டடத்திலேயே தற்போது கிறிஸ்தவ மற்றும் இந்து மத விவகாரத் திணைக்களங்களும் இயங்கி வருகின்றன.