காசாவின் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரேல் உடனடியாக ரபா மீதான தாக்குதலையும் ஏனைய நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனிதாபிமான பொருட்களை காசாவிற்குள் கொண்டு செல்வதற்காக இஸ்ரேல் எகிப்து எல்லையில் உள்ள ரபா எல்லையை திறக்க வேண்டும் விசாரணையாளர்களும் காசாவில் என்ன நடக்கின்றது என்பதை அறிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் காசாவிற்குள் செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்றம் தனது உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும் காசாவிற்கான அடிப்படை சேவைகள் மற்றும் மனிதாபிமான உதவிகளை “தடையின்றி வழங்குவதற்கு” இஸ்ரேலுக்கு ஒரு தேவையை இந்த தீர்ப்பு மீண்டும் வலியுறுத்தியது.
காசாவில் இஸ்ரேலிய பணயக் கைதிகள் இன்னும் ஹமாஸ் மற்றும் பிற ஆயுதக் குழுக்களால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது “ஆழ்ந்த கவலைக்குரியது” என்று நீதிபதி சலாம் கூறினார்.
அவர்களை உடனடியாக மற்றும் நிபந்தனையின்றி விடுவிக்க” அழைப்பு விடுத்தார். தீர்ப்பு வழங்கப்பட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு, இஸ்ரேல் போர் விமானங்கள் ரஃபாவின் மையத்தில் உள்ள ஷபூரா முகாம் மீது தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
காசாவில் நடந்த போரில் இஸ்ரேலின் நடத்தை பற்றி கடும் விமர்சனம் அதிகரித்து வருகிறது, இந்த வாரம்,ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீனிய அரசை அங்கீகரிப்பதாக அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.