ரணிலுக்கு மேலும் 5 வருட ஆட்சிக்காக மக்கள் கருத்து கணிப்பு? l UNPக்குள் கலந்துரையாடல்!

Date:

மக்கள் கருத்து கணிப்பின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவி காலத்தை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடாத்தப்பட வேண்டும் என்ற நிலையை தவிர்த்து, மக்கள் கருத்து கணிப்பொன்றை நடாத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

குறிப்பாக ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடித்துக்கொள்வதற்கான மக்கள் கருத்து கணிப்பை நடாத்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களில் பல சட்டமூலங்களை பெரும்பான்மையுடன் நிறைவேற்றியுள்ளமையானது, மக்கள் கருத்து கணிப்பொன்றை நடாத்துவதற்கு ரணில் விக்ரமசிங்கவிற்கு சாதகமானதாக உள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியலமைப்பின் பிரகாரம், எதிர்வரும் நவம்பர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைவதுடன், புதிய ஜனாதிபதி அந்த திகதியில் பதவி பிரமாணம் செய்ய வேண்டியது கட்டாயமானதாகும்.

இந்த நிலையில், அரசியலமைப்பின் பிரகாரம் மக்கள் கருத்து கணிப்பொன்றை நடாத்துவது தொடர்பில் சட்ட வல்லுநர்கள் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகின்றது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...