ரபாவில் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட ஒரு மாதகாலத்துக்கு குனூத்துன் நாஸிலாவில் பிரார்த்திக்குமாறு ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

Date:

பலஸ்தீன் – ரஃபா என்ற பகுதியில் இடம்பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்பட குனூத்துன் நாஸிலாவில் பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுதொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பலஸ்தீன் – காஸாவில் பல மாதங்களாக தொடர்ந்து தாக்குதல்கள் நடாத்தப்பட்டு, தற்போது அங்குள்ள ரஃபா பகுதியில் கொடூரமான தாக்குதல் நடாத்தப்பட்டு வருகின்றது.

இத்தாக்குதலில் அப்பாவி முஸ்லிம்களில் பலர் உயிரிழந்தும் இன்னும் அதிகமானோர் காயமுற்றும் வருகின்றனர்.

எனவே அப்பகுதியில் இடம் பெற்றுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல் நிறுத்தப்படவும் அமைதி, சமாதானம் மற்றும் நீதி நிலை நாட்டப்படுவதற்கும் அனைத்து மஸ்ஜித்களிலும் பஜ்ர் தொழுகையில் ஓதக்கூடிய குனூத்தை ஐவேளைத் தொழுகைகளில் மஃமூம்களுக்கு சடைவில்லாமல் ஒரு மாதகாலத்திற்கு ஓதிவருமாறும் அதில் பின்வரும் துஆக்களை சேர்த்துக் கொள்ளுமாறும் மஸ்ஜிதுடைய இமாம்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கின்றது.

மேலும் இந்த சங்கையான மாதத்தில் தொழுகை, நோன்பு, ஸதகா, தௌபா மற்றும் இஸ்திஃபார் போன்ற நல்லமல்களைச் செய்வதில் கூடிய கவனம் செலுத்தி துஆப் பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் அனைத்து முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.

Popular

More like this
Related

கதிர்காம பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல: சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் தவறானதாகும் – கோட்டாபய

கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக்கு அருகில் கட்டப்பட்டுள்ள கட்டிடம் தனக்கு சொந்தமானது அல்ல...

இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிய விதத்தை வெளிப்படுத்தி பொலிஸார்

கணேமுல்ல சஞ்சீவ கொலை குற்றச்சாட்டில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி...

2 ஆண்டு போர் முடிவுக்கு வந்தது: டிரம்ப் தலைமையில் இஸ்ரேல் – ஹமாஸ் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது: அடுத்து என்ன?

இஸ்ரேல் - காசா போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நேற்று எகிப்தில்...