‘ ரெமல்’ தாக்கம் நாளை முதல் குறைவடையும்: இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Date:

ரெமல் சூறாவளியின் தாக்கம் நாளை(30) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தென்மேற்கு பருவப்பெயர்ச்சியின் காரணமாக, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று தினங்களில் நாட்டின் தென்மேற்கு பிராந்தியத்தில் மழையுடனான வானிலை நிலவும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, மழையுடனான வானிலை காரணமாக 10,483 குடும்பங்களை சேர்ந்த 39,156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 8 மாவட்டங்களின் சில பிரதேச செயலகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, காலி, கம்பஹா, களுத்துறை, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சவூதி- பாகிஸ்தான் ஒப்பந்தம்: இந்தியா உடனான உறவுகளை மனதில் வைத்து சவூதி செயல்படும் என நம்புவதாக இந்தியா தெரிவிப்பு.

சவூதி மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கையெழுத்தான...

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று

ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு நிறைவு விழா இன்று (20)...

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...