55 வயதுக்கு பின்னரும் சம்பளம்!

Date:

யுத்தத்தின் போது உயிரிழந்த மற்றும் முற்றாக அங்கவீனமடைந்த சிவில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு 55 வயது பூர்த்தியான பின்னர் நிறுத்தப்படும் சம்பளத்தை தொடர்ந்தும் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

யுத்தத்தின் போது உயிரிழந்த சிவில் பாதுகாப்புப் படை வீரர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு மற்றும் யுத்தத்தினால் முற்றாக அங்கவீனமடைந்த சிவில் பாதுகாப்புப் படைவீரர்களுக்கு 55 வயது வரை சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 55 வயதின் பின்னர் அவர்களுக்கு சம்பளமோ ஓய்வூதிய  கொடுப்பனவோ வழங்கப்படாததினால் அவர்கள் முகங்கொடுக்கும் அசௌகரியங்கள் தொடர்பில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னகோன்  விசேட கவனம் செலுத்தியுள்ளார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்   ஜனாதிபதி அவர்களுக்கு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியதை அடுத்து, அவ்வாறான  சிவில் பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிறுத்தப்படும் கொடுப்பனவை மேலும் வழங்குவது தொடர்பில்  ஜனாதிபதி  கவனம் செலுத்தியுள்ளார்.

அத்துடன் பாதுகாப்பு அமைச்சு மற்றும் சிவில் பாதுகாப்புப் படையின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில ஆகியோர் இது தொடர்பில் அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...