700-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட மிகப்பெரிய நிலச்சரிவு: பப்புவா நியூ கினியாவில் பயங்கரம்

Date:

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 700 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தென்மேற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடு பப்புவா நியூ கினியா. இங்கு உள்ள எங்கா மாகாணம், காகலம் மலை கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் வீடுகள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்துள்ளது.  இதில் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் முழுவதும் தரைமட்டமாகின.

நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.  மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருகிறது.

https://x.com/AJEnglish/status/1794911401171120271

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் அக்கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வந்தது. தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்ற நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 700 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மலைகள், காடுகள், ஏராளமான ஆறுகள் கொண்ட பப்புவா நியூ கினியாவில்
1 கோடியே 17 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, 850 மொழிகள் பேசப்படுகின்றன. இதன்மூலம், அதிக மொழி பேசும் நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ளது.இங்கு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளன.

 

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...