இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் திடீர் மரணம் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள இலங்கை இது தொடர்பில் அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்துள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
மேலும் பிரான்ஸ் அதிகாரிகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் இந்த துயரமான தருணத்தில் இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இறுதி நிகழ்வுகள் குறித்த ஏற்பாடுகளை அதிகாரிகள் அறிவிப்பார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.