இலங்கை அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனமான ரூபவாகினியில் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) பயன்படுத்தி, தமிழில் செய்தித்தொகுப்பை செய்வதற்கான செயல்முறை மே 10ஆம் திகதி செயற்படுத்தப்பட்டது.
ரூபவாஹினியின் தொலைக்காட்சி தொகுப்பாளர்களான சி.பி.எம். சியாம் மற்றும் தீபதர்ஷனி ஆகியோரை பிரதிநிதித்துவப்படுத்தியே இந்த செய்தி ஒளிபரப்பாகியுள்ளது.
அரச ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர், கலாநிதி பிரசாத் சமரசிங்கவின் வழிகாட்டலில் செய்திப் பணிப்பாளர் இந்திக மாரசிங்கவின் அறிவுறுத்தல்களுக்மைய காமினி பண்டார மெனிக்திவெலவின் தயாரிப்பில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.