AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த திட்டம்: ஜனாதிபதி

Date:

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட  பசுமை இல்லத்தை பார்வையிடுவதற்காக இன்று  (17) கேகாலை பகுதிக்கு சென்ற போதே ஜனாதிபதி இதனைத்  தெரிவித்தார்.

புதிய மாற்றத்திற்கு தயாராக உள்ள   தனியார் துறை தொழில்முனைவோருக்குத்  தேவையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்திற்காக 100 பிரதேச செயலாளர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...