“All eyes on Rafah” : உச்சக்கட்ட கோபத்தில் உலக நாடுகள்!

Date:

‘ All eyes on Rafah’ இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும் ஒரு தொடர் இதுதான். பலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகின் பல்வேறு நாடுகளும் குரல் கொடுப்பதைக் குறிப்பதாகவே இந்தத் தொடர் இருக்கிறது.

இஸ்ரேல் காசா இடையே கடந்த பல மாதங்களாக மோதல் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும்.

காசாவில் உள்ள ஹமாஸை முழுமையாக அழிக்கும் வரை ஓயப்போவதில்லை என்று இஸ்ரேல் அறிவித்து இருந்தது.

இதன் காரணமாக காசாவில் ஒவ்வொரு பகுதியிலும் ஹமாஸ் தாக்குதல்களை நடத்தி வந்தது. ஏற்கனவே, வடக்கு காசாவில் தனது தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்திய நிலையில், அடுத்து தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகரில் தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்தது.

இருப்பினும், ரஃபா என்பது பலஸ்தீன மக்கள் அதிகம் வாழும் நகரங்களில் ஒன்றாகும்.

காசாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையில் சுமார் 50%, அதாவது 10 லட்சம் பேர் அங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த ரஃபா நகர் எகிப்து எல்லையை ஓட்டி அமைந்துள்ளது. அங்குப் பல அகதிகள் முகாம்களும் உள்ளன. இதனால் ரஃபாவில் தாக்குதல் நடத்தினால் அது பேரழிவைத் தரும் என்று உலக நாடுகள் எச்சரித்தன.

அவ்வளவு ஏன் அனைத்து விஷயங்களிலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா கூட ரஃபா மீது தாக்குதல் வேண்டாம் என்றே இஸ்ரேலை எச்சரித்தது.

இந்த எச்சரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு இஸ்ரேல் ரஃபா மீது தாக்குதலைத் தொடங்கியது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை  ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலின் ஏவுகணைகளில் ஒன்று ரஃபாவில் உள்ள புலம்பெயர்ந்த மக்களின் முகாமை தாக்கியது. இதில் 45 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்தே All eyes on Rafah என்ற சொற்றொடர் இணையத்தில் பரவ தொடங்கியுள்ளன.

shahv4012 என்ற இன்ஸ்டா யூசர் முதலில் இந்த போஸ்டரை பகிர்ந்தார். AI மூலம் உருவாக்கப்பட்ட அந்த போஸ்டரில் All eyes on Rafah என்ற சொற்றொடர் முதலில் இடம்பெற்றிருந்தது.

உலக சுகாசார அமைப்பின் காசாவுக்கான பிரதிநிதியான ரிச்சர்ட் பீபர்கார்ன் என்பவர் All eyes were on what is happening in Rafah என்று கூறியிருந்த நிலையில், அதில் இருந்த இந்த All eyes on Rafah என்ற சொற்றொடர் உருவாகி இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...