கொழும்பு வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில், வை.எம்.எம்.ஏ. பேரவையின் உதவிச்செயலாளர் அப்துல் அலீம் எம். நுவைஸ் அவர்களின் நிதியுதவியில் 50 பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த 12 ஆம் திகதி வெல்லம்பிட்டி Dewdrop Banquet Hall இல் இடம்பெற்றது.
அகில இலங்கை அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசியத் தலைவர் இஹ்ஸான் ஏ. ஹமீடின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் துஷார முத்துகொட வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இந்திக்க நிலந்த, பிரஜா பொலிஸ் OIC ரொஷான் அசங்க மற்றும் வை. எம். எம். ஏ. பேரவையின் மாவட்ட பணிப்பாளர் நஸாரி காமில் , மத்திய கொழும்பு வை.எம்.எம்.ஏ. கிளை தலைவர் அஹமட் சலாஹுதீன், கல்வித் தலைவர் அன்வர் சதாத் மற்றும் Exco உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் ஸ்ரீதர்மோதயா விஹாராதிபதி பூஜ்ய கவிதாஜா தேரர், மஸ்ஜித் அஸ் ஸஃபா இமாம் மௌலவி ஏ. முனாப் (முஅய்யிதி) உள்ளிட்ட சமயத் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.