அதிர்ந்தது இஸ்ரேல் தலைநகர் : கடந்த 4 மாதங்களில் முதல் முறையாக இஸ்ரேல் மீது ஹமாஸ் பாரிய ரொக்கெட் தாக்குதல்

Date:

இஸ்ரேல் தலைநகரமான டெல் அவிவ் மீது மிகப் பெரிய ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பின் அல்- கஸ்ஸாம் ஆயுதப் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் கடந்த 4 மாதங்களில் முதல் முறையாக இஸ்ரேல் மீது ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனிடையே இஸ்ரேலிய இராணுவம் டெல் அவிவ் உள்ளிட்ட மத்திய நகரங்களில் ராக்கெட்டுகள் அச்சுறுத்தலை மக்களுக்கு உணர்த்தும் வகையில் எச்சரிக்கை சைரன்களை ஒலிக்கவிட்டது.

ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் படைப்பிரிவான அல்-கஸ்ஸாம் ஞாயிற்றுக்கிழமை டெலிகிராமில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பொதுமக்களுக்கு எதிரான சியோனிசப் படுகொலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட்டுகள் காசாவில் இருந்து ஏவப்பட்டதாக ஹமாஸின் அல் அகுஸா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேலில் ராக்கெட் தாக்குதலுக்கான சைரன்கள் எதுவும் கேட்கவில்லை.

இந்த நிலையில், இன்று சைரன் ஒலித்ததற்கான காரணத்தை இஸ்ரேல் இராணுவம் உடனடியாக தெரிவிக்கவில்லை. அதேபோல், இஸ்ரேலின் அவசர மருத்துவ சேவை பிரிவு தங்களுக்கு உயிரிழப்புகள் பற்றி எந்தத் தகவலும் வரவில்லை” என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திய தரை மற்றும் வான்வழி தாக்குதலின் பேரழிவுகளை தாங்கி வந்த நிலையில், காசாவால் இன்னும் நீண்ட தூர ஏவுகணைகளை ஏவும் திறன் இருக்கிறது என்பதை இந்த தாக்குதல் உணர்த்துகிறது.

காசா முழுவதும் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் இந்த வாரம் தீர்ப்பு வழங்கிய போதிலும், இஸ்ரேல் இராணுவம் ரபா மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய நிலையில் ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சமுத்திர தூய்மை வாரம் ஆரம்பம்

சர்வதேச சமுத்திர தூய்மை தினத்திற்கமைய சமுத்திர வளங்களை பாதுகாக்கும் வாரம் இன்று...

நாட்டில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு!

சப்ரகமுவ, மேல் , வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் கண்டி...

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...