இந்தியாவில் கைதானவர்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த கொத்தலாவல பல்கலைக்கழக விரிவுரையாளருக்கு பிணை!

Date:

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான புன்சர அமரசிங்க என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்மாதம் 20 ஆம் திகதி இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத் விமானிநிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் எனக்கூறி சந்தேகத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இந்த நால்வர் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் புன்சர அமரசிங்க  கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு போலியான தகவல்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...