இம்ரான் கானுக்கு பிணை: இஸ்லாமாபாத் நீதிமன்றம் தீர்ப்பு

Date:

நில ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமாபாத் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (15) அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

இம்ரான் கானின் வழக்கறிஞர் அவருக்குப் பிணை வழங்கப்படுவதை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தினார்.

எவ்வாறாயினும் மேலும் இரு வழக்குகளுக்கான தண்டனையாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளாரென அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அவர் நான்கு வழக்குகளில் குற்றவாளியென அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இரு வழக்குகளில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் முதல் பல்வேறு பல்வேறு வழக்குகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டு உட்பட பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

Popular

More like this
Related

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...

2025 இல் இலங்கை இறக்குமதி செய்துள்ள வாகனங்களின் விபரம்!

இந்த ஆண்டு இதுவரை இலங்கை 220,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை இறக்குமதி...