உலகப் பொருளாதார மன்றத்தின் முதல் சிறப்புக் கூட்டம் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் 28, 29 ஆம் திகதிகளில் நடைபெற்றது.
சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மான் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் உலகின் பல நாடுகளது தலைவர்களும், அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பங்குபற்றி உள்ளார்.
இதன்போது சவூதி அரேபிய முதலீடுகள் அமைச்சர் காலித் அல் பாலிஹ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட நாள் தேவையாக இருந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் முதலீடுகளை அதிகரிக்க வாய்ப்புள்ளது என அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இம்மாநாட்டில் இலங்கையின் தொழில் வல்லுனர்களையும் துறைசார் வல்லுனர்களையும் அமைச்சர் அலி சப்ரி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது பஹன ஊடக நிறுவனத்தின் தலைவரான ஸெய்யித் சாலிம் மௌலானா அவர்களும் கலந்துகொண்டார்.