விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர் அப்துல்லாஹியன் ஆகியோரின் உடல்களை ஈரானிய மீட்புக் குழுவினர் மீட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளிவிவகார அமைச்சர் எச்.அமீர்-அப்துல்லாஹியன் மற்றும் ஏனைய சிரேஷ்ட ஈரானிய அதிகாரிகளின் துயர மரணத்தால் இலங்கை ஆழ்ந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உத்தியோகபூர்வ எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை இட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசுக்கும், ஈரான் மக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.