குழந்தைகளை பறிகொடுத்து ஏங்கும் காசா தாய்மார்கள்: ஒவ்வொரு நாளும் 37 குழந்தைகள் தங்கள் தாயை இழக்கிறார்கள்!

Date:

உலகெங்கிலும் அன்னையர் தினத்தை அனுஷ்டிக்கும் நிலையில் காசா பகுதியில் உள்ள தாய்மார்கள் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களுக்கு மத்தியில் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.

இஸ்ரேல் தாக்குதல்களில் 34,900 க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். இந்தப்போரில் 78 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இத்தாக்குதல்களில் எண்ணற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இழந்து, பலர் அனாதைகளாக தவிக்கின்றனர்.

தாங்கள் அனுபவித்த துயரம் மற்றும் கஷ்டங்கள் இருந்தபோதிலும், பலஸ்தீனப் பகுதியில் தங்கள் குழந்தைகளையும், மனைவிகளையும், உறவினர்களையும் இழந்த தாய்மார்கள், துன்பங்களை எதிர்கொள்வதிலும் வாழ்க்கையையும் உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களால் வீடுகள் அழிக்கப்பட்டு இப்போது ரஃபாவில் கூடாரங்களில் வாழும் தாய்மார்கள் அன்னையர் தினத்தை சோகத்துடனும் வேதனையுடனும் கூறுகின்றார்கள்.

உலகம் முழுவதும் அன்னையர் தினம் ஆண்டின் வெவ்வேறு திகதிகளில் வருகிறது, ஆனால் சர்வதேச அன்னையர் தினம் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

தண்ணீர் , மின்சாரம் இல்லாத, விவசாய மற்றும் நிலப்பகுதிகளைக் கொண்ட ரஃபாவின் அல் மவாசி பகுதியில் உள்ள தாய்மார்கள், கூடிய விரைவில் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள் என்று நம்புகிறார்கள்.

தாய்மார்கள் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து தங்கள் குழந்தைகள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் பாதுகாப்பாக வாழ விரும்புகிறார்கள்.

55 வயதான எட்டு பிள்ளைகளின் தாயான ஹனா அபு ஜபல், போரில் குழந்தையை இழந்த வலியைப் பகிர்ந்து கொண்டார். ஒரு தாய்க்காக குழந்தையை இழப்பது என்பது ஆன்மாவை இழப்பது போன்று அவர் தெரிவித்துள்ளார்.

“ஒவ்வொரு நாளும் 37 குழந்தைகள் தங்கள் தாயை இழக்கிறார்கள்” என UNRWA நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

காசா படுகொலைக்கு எதிராக சென்னையில் மாபெரும் போராட்டம்

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்றது. பலஸ்தீனத்தில்...

வெளிநாடுகளில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கான இழப்பீடு அதிகரிப்பு!

வெளிநாடுகளில் பணிபுரியும்போது உயிரிழக்கும் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை...

அஷ்ரப் மருத்துவமனையில் கட்டண வார்டை திறந்து வைத்த சுகாதார அமைச்சர்

கல்முனை அஷ்ரப் நினைவு மருத்துவமனையின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக...

“Disrupt Asia 2025”: டிஜிட்டல் பொருளாதாரமும் புத்தாக்கத்தையும் முன்னிறுத்தும் மாநாடு

நாட்டின் முன்னணி புதிய தொழில்முனைவோர் மாநாடு மற்றும் புத்தாக்க விழாவான “Disrupt...