‘சர்வ ஜன பலய” (சர்வசன அதிகாரம்) என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டணிக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பில் இன்று (27) காலை இடம்பெற்றது.
”ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் நாடு – மகிழ்ச்சி நிறைந்த நாடு” என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
பிவித்துறு ஹெல உறுமய, தேசிய சுதந்திர முன்னணி, மவ்பிம ஜனதா கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட மேலும் சில அரசியல் கட்சிகள் இந்த கூட்டணியுடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தொழிலதிபர் திலித் ஜயவீர மற்றும் புத்திஜீவிகள் பலர் இந்த புதிய அரசியல் கூட்டணியை தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.