சாதாரணதர பரீட்சை நாளை ஆரம்பம்: முஸ்லிம் மாணவிகளுக்கான அறிவித்தல்

Date:

நாளையதினம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாணதரப் பரீட்சையில் பங்கேற்கும் அனைத்து முஸ்லிம் மாணவிகளுக்கும் பரீட்சை நிலையத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பில் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

சில பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் ஹிஜாப் அணிந்து பரீட்சை நிலையங்களுக்குள் பிரவேசிக்க முடியாது என்ற பொய்யான தகவல்கள்   பகிரப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஆணையாளர் நீல் அத்துகோரளவிடம் ‘நியூஸ் நவ்’ விசாரித்த போது,

2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பரீட்சை திணைக்களத்தின் வர்த்தமானி அறிவித்தலின் படி தேசிய அடையாள அட்டையில் காணப்படுவது போல  அனைத்து பரீட்சார்த்திகளும் தமது முகம் மற்றும் காதுகள் தெளிவாக தெரிவதை உறுதி செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

பரீட்சார்த்தியின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் புளூடூத் போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலும் இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்காரணமாக ஹிஜாப் அணிவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் அதனை காதுகளை திறந்து விடுவது கட்டாயம் எனவும் ஆணையாளர் நீல் அத்துகோரல தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...