சீனாவில் பாரிய மண்சரிவு: 24 பேர் பலி

Date:

தெற்கு சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் வாகனங்கள் சிக்கிய விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் காயமடைந்த 30 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் இன்றைய உள்ளூர் நேரப்படி அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அவ்வழியே பயணித்த வாகனங்கள் மண்சரிவில் சிக்கிய விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குவாங்டாங் மாகாணத்தில் உள்ள Meizhou நகரத்திற்கும் Dabu கவுண்டிக்கும் இடையேயான வீதியின் ஒருபகுதியிலேயே அதிகாலை 2:10 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் 18 வாகனங்களும், அதில் பயணித்த 49 பேரும் ஆபத்தில் சிக்கினார்கள்.

இறுதியாக வந்த தகவலின்படி, இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மேலும் 30 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் அபாயக்கட்டத்தை தாண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காட்சிகள், நெடுஞ்சாலை பகுதியளவு உருக்குலைந்து இருப்பதையும், அதன் சரிவின் அடிவாரத்தில் சிக்கிய வாகனங்ளையும் காட்டுகின்றன.
மீட்பு நடவடிக்கைக்கு உதவ சுமார் 500 பேர் அடங்கிய குழு அங்கே முகாமிட்டுள்ளது. வழக்கமான பாதுகாப்பு, அவசரகால தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஆகியோருடன் சுரங்க மீட்பு குழுவினரும் அதில் அடங்கியுள்ளனர்.

தென் சீனாவின் மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட தொழில்துறை ஆற்றல் மையமான இந்த பிராந்தியம், அண்மைய கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...