டொனால்ட் டிரம்ப் குற்றவாளி: அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுபூர்வமான தீர்ப்பு

Date:

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் (Donald Trump) வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2016ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைப்பதற்கு நடிகை ஒருவருக்கு 1.3 இலட்சம் டொலா் (சுமாா் ரூ.109 கோடி) வழங்கியதாக டிரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நீதிபதி அறிவித்த நிலையில் ஜூலை 11ஆம் திகதி டிரம்ப்பிற்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இது முதல் முறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேன்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் டிரம்ப்பிற்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் முனைப்புக்களில் டிரம்ப் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...