நவீன விவசாயத்தை உருவாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Date:

இலங்கையில் விவசாயம் மற்றும் வனப்பாதுகாப்பு திட்டத்திற்காக இணைந்து பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் காலநிலை மாற்ற செயலகம் சார்பாக ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதி, காலநிலை இடர் மன்றத்தின் செயலாளர் நாயகம் மொஹமட் நஷிடி, போர்ச்சுகலின் (Navita Capital) இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கார்லோஸ் கோமஸ். நிறுவனம், கையெழுத்திட்டுள்ளது.

பண்ணை விளைச்சலையும் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிப்பதற்காக மேம்படுத்தப்பட்ட மற்றும் நிலையான விவசாய முறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இலங்கையின் கிராமப்புற சமூகங்களில் வீட்டு விவசாயத்தை மேம்படுத்துவது இந்த உடன்படிக்கையின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் 100 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டு அனுராதபுர மாவட்டத்தில் ஒரு முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படும்.

இதன் கீழ் 15,000 விவசாய குடும்பங்களுக்கு தேவையான ஆதரவும் தொழில்நுட்பமும் வழங்கப்படும்.

இந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு அனுராதபுரம் மாவட்டத்தில் 15,000 குடும்பங்களும் 15,000 ஏக்கரும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் நவீன விவசாயத்தை உருவாக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டத்திற்கமைவாக, நவீன தொழில்நுட்பத்தை விவசாயத்தில் அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிக்க போர்த்துகீசிய நிறுவனம் ஒன்று முதலீட்டாளராக முன்வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...